வட அமெரிக்காவுக்கு அதன் வடிவம் எவ்வாறு வந்தது என்று தெரியுமா?
வட அமெரிக்காவானது உலகிலேயே உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்பில் பரந்த இடம்.
எல்லாவகையான சூழல் நிலைமைகளையும் கொண்டுள்ள செருக்கு அந் நாட்டுக்குண்டு.
அது வெப்ப மண்டலத்தை தெற்கு மெக்சிக்கோ பகுதியிலும், அதேநேரம் கனடாவின் வடபகுதியில் பனிப் பாறைகளையும் கொண்டுள்ளது.
இதை விட காடுகள், மலைகள், பாலைவனங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.
இதெல்லாம் எவ்வாறு அங்கு சாத்தியமானது?
இங்கு தரப்பட்ட காணொளியில் கண்ட மோதல்களும், பிளவுகளும் எவ்வாறு வட அமெரிக்காவுக்கு அதன் வடிவத்தை கொடுத்துள்ளது என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Tectonic plates ஆனது மிகப்பெரிய நிலத்திணிவு. இது புவியின் Mantle பகுதியை சுற்றி ஒரு ஓடு போன்று காணப்படுகிறது.
இந்த தட்டுக்கள் தொடர்ச்சியாக அதிர்வதனால், ஒன்றையொன்று உரசுவதனால் புவி நடுக்கம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒன்றாக பொதுவாக 7 முக்கிய Tectonic plates புவியில் உள்ளது.
ஆனாலும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட்டிருக்கவில்லை.
வட அமெரிக்காவின் வரலாறு 750 மில்லியன் வருடங்களுக்கு முன்னாக தொடங்குகின்றது.
மகா கண்டமான Rodinia நிலையற்று, தளர்வுற்று உடைந்த போது தான் மேற்கு அமெரிக்க கடற்கரை உருவாகியது.
அடுத்த சில நூறு ஆண்டகளுக்கு மேற்படி மகா கண்டம் தீவுகளால் அடிக்கப்பட்டு அது மேலும் மேலும் பெருக்க ஆரம்பித்தது.
250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு Rodinia ஆனது Laurentia என அடைக்கப்பட்டது. இது பின்னர் உடைந்து African Plate தோன்றி Pangaea மகா கண்டம் தோன்ற ஏதுவானது.
Pangaea ஆனது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை. இது பின்னர் வெவ்வேறாக உடைந்து எரிமலைகளையும், பறைகளையும் தோற்றுவித்தது. இதை தான் நாம் இன்று வட அமெரிக்காவில் காண்கின்றோம்.
இது பற்றி மேலும் தெரிய ஆவலாயின் தரப்பட்டுள்ள ஒளிப்பதிவை பார்வையிடுங்கள்!
வட அமெரிக்காவுக்கு அதன் வடிவம் எவ்வாறு வந்தது என்று தெரியுமா?
Reviewed by Author
on
July 17, 2016
Rating:

No comments:
Post a Comment