மரத்துடன் மோதி கோழிக்கடைக்குள் புகுந்து டிப்பர் விபத்து; சாரதி காயம்
மானிப்பாய் வீதி மருதனார்மடம் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம் பெற்ற டிப்பர் வாகன விபத் தில் வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வன்னேரிப்பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு மானிப்பாய் வீதி வழியாக பயணித்துக் கொண் டிருந்த சமயம் சாரதியின் கவனயீனத்தால் வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கோழி விற்பனை நிலையத்திற்குள் புகுந்துள்ளது.
குறித்த கடையினுள் ஒருவர் உறக்கத்தில் இருந்தசமயமும் காலைவேளை என்பதால் சந்தைக்கு பல விவசாயிகள் வீதியால் சென்று கொண்டிருந்த நிலைமையிலும் ஏற்பட்ட இவ்விபத்தில் தெய்வாதீனமாக பாரிய அனர்த்தம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் டிப்பரை செலுத்தி வந்த சாரதி தலையில் காயமடைந்ததோடு டிப்பர் வாகனமும் கோழி விற்பனை நிலையமும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரத்துடன் மோதி கோழிக்கடைக்குள் புகுந்து டிப்பர் விபத்து; சாரதி காயம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment