அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா படுகொலை வழக்கு; 12 சந்தேக நபர்களுக்கு 26ஆம் திகதிவரை மறியல்


புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் யூலை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எம்.எல்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது கடந்த வழக்கு தவணையின் போது குறித்த மாணவி வசித்த இடத்திற்கு பொறுப்பாக இருக்கும் கிராம சேவகர் அங்குள்ள மக்கள் தொகை, கொலை நடைபெற்ற போது இருந்த மக்களின் எண் ணிக்கை, விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு அமைய நேற்று வழக்கு தவணைக்கு பிரசன்னமாகிய ஜே-24 பகுதிக்கு பொறுப்பான செல்லத்துரை சிவா என அழைக்கப்படும் கிராமசேவகர் மன்றில் தோன்றி புங்குடுதீவு தென்கிழக்கு பகுதி தொடர்பிலான விபரங்களை யும், மாணவி வித்தியா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இருந்த 30 குடும்பங்களின் விபரங்களையும், படுகொலை நடைபெற்ற பின்னர் தற்போது உள்ள 31 குடும்ப விபரங்களையும் ,பின்னர் அப்பகுதியை விட்டு வெளியேறிய இரு குடும்பங்களின் விபரங்களையும் நீதிவான் முன் சமர்ப்பித்து விளக்கமளித்தார்.

பின்னர் மன்றில் ஆஜரான குற்றப் புலனாய்வு அதிகாரி நீதவானிடம் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களை விசாரணை செய்வதற்கு சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார்.
இதன் போது நீதவான் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்ட தன் பின்னர் இது தொடர்பில் ஆராய முடியும். அதுவரை மன்றில் உள்ள சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை வழங்க முடியாது என மறுத்தார்.

இதன்போது தனது கருத்தை தொடர்ந்த அவ்வதிகாரி குறித்த வாக்கு
மூலங்களை வழங்கினால் விசாரணைகளை துரிதகதியில் முன் னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் நீதிமன்றத்துக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பெரும்பாலான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் ஒரு சில அறிக்கைகள் மிகவிரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
வித்தியா படுகொலை வழக்கு; 12 சந்தேக நபர்களுக்கு 26ஆம் திகதிவரை மறியல் Reviewed by NEWMANNAR on July 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.