ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு
ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி சேத்துக்கண்டி முரசுமோட்டை பகுதியிலுள்ள
ஐயன்குளம் ஆற்றில் இடம்பெற்றது.
இதில் சேத்துக்கண்டி முரசு மோட்டையைச் சேர்ந்த மகாலிங்கம் சுமன் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தரே நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பிரஸ்தாப நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேற்படி குளத்தில் நீராடச் சென்றுள்ளார்.
நீராடலின்போது அவர் தனித்து நின்றுள்ளார். பின்னர் நண்பர்கள் நீராடிவிட்டு கரைசேர்ந்தவேளை பிரஸ்தாப நபரைக் காணவில்லை.
இதனையடுத்து பிரஸ்தாப நபர் நீராடிக் கொண்டிருந்த இடத்தை சென்று பார்த்தவேளை அவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் உறவினர் களால் கிளிநொச்சி பொலிஸ் நிலை யத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
July 14, 2016
Rating:

No comments:
Post a Comment