சிக்கியது புத்தரின் எலும்புக்கூடுகள்? ஆச்சரியத்தில் உலகம்!-----படங்கள் இணைப்பு
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணைதினத்தில் பிறந்தவர்.
இவர் கி.மு 563-க்கும் கி.மு 483-க்கும் இடையில் வாழ்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், நேபாளத்தில் ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை கண்டறிந்துள்ள அகழ்வாய்வாளர்கள் கிறிஸ்த்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தர் வாழ்ந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்..! தற்போது சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 1000 ஆண்டுகள் வயதான சீன பேழை ஒன்றை கண்டறிந்துள்ளனர்..!
பேழைக்குள் இருந்த்து கிடைக்கப்பெற்ற எலும்பு துண்டுகள் ஆனது கவுதம புத்தருடையது என்று கூறுகிறது பேழையின் செதுக்கியசித்திரங்கள்.
இதன் மூலம் பேழைக்குள் இருந்த அந்த மண்டையோடு துண்டு கவுதம புத்தருடையது என்றும் உடன் உள்ள எஞ்சியுள்ள எலும்புகள் பிற புத்த துறவிகளின் தொகுப்பு என்றும் நம்பப்படுகிறது.
கோவிளுக்கு அடியில் ஒரு மறைவிடத்தில் இருந்த கல் பேழையை திறந்து போது அதனுள் ஸ்தூபி என்று ஒரு அழகுபடுத்தப்பட்ட சன்னதியை கண்டுபிடித்துள்ளனர் அது தியானம் செய்ய பயன்படுத்தப்படும் இடமாக இருந்திருக்கலாம்..!
கண்டுபிடிக்கப் பட்ட பேழையானது 117 சென்டிமீட்டர் உயரமும் , 45 சென்டிமீட்டர் அகலம் ( 1.5 அடி , 4 அடி) கொண்ட சந்தனக்கட்டை, தங்கம் மற்றும் வெள்ளியால் உருவான ஆபரணங்கள் பதிக்கப்பட்ட ஒரு பெட்டியாகும்..!
கண்டுபிடிக்கப்பட்ட பேழையானது 1000 சிஇ காலத்தை சேர்ந்தது என்றும், அப்பேழையை உருவாக்கியவர்கள், உருவாக்க நிதியுதவியவர்கள் மற்றும் பேழை கொண்டிருக்கும் எலும்பு துண்டுகள் ஆகியோர்களின் பெயர்களை கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் 20 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு வெள்ளி கலசத்தில் சேமித்து வைக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்படும் இந்த கால் பேழைக்குள் இருக்கும் புத்தரின் மண்டை எலும்பு கொண்ட சிறிய தங்கபேழை யானது எப்படி இங்கு வந்தது என்ற கதையை சொல்கிறது.
புத்தர் இறந்த பிறகு அவரது உடல் ஆயிரக்கணக்கான பகுதிகளாக பிரிக்கப்பட்டபின் ஹிரன்னாவட்டி (Hirannavati) நதியில் தகனம் செய்யப்பட்டது, அதில் 19 பகுதிகள் சீனாவிற்கு கொண்டுவரப்பட்டது என்ற டெமிங் (Deming) கதை ஒன்றும் உள்ளது.
அந்த துண்டுகளில் ஒன்று ஏனைய பெளத்த துறவிகளின் இணைக்கப்பெற்று இந்த தங்க பெட்டிக்குள் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பேழை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை வந்தடைவதற்க்கு இந்த பேழையின் பயணத்தில் பல திருப்பங்கள் வந்துள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது.
பின்னர் இந்த கோவில் 11-ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஸேன்ஸோங் மூலம் பராமரிக்கப்பட்டு, அதன் மறைவான சன்னதியில் பாதுகாப்பாக பேழை வைக்கப்பட்டுள்ளது.
அழகுபடுத்தப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பேழைகளில் தாமரை மலர்கள், பீனிக்ஸ்கள் மற்றும் அதன் பாதுகாவலர்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
சிக்கியது புத்தரின் எலும்புக்கூடுகள்? ஆச்சரியத்தில் உலகம்!-----படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 09, 2016
Rating:

No comments:
Post a Comment