'மன்னாரின் சமர்'; - சம்பியனாகியது ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகம்
'மன்னாரின் சமர்'; -
சம்பியனாகியது ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகம்.
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகமும் இணைந்து மன்னார் வரலாற்றில் முதல் தடவையாக நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியாகிய மன்னாரின் சமர் இறுதிப்போட்டியானது 03.07.2016 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு ஜோசவ்வாஸ் நகர் ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 4 மாதங்களாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 26 கழகங்கள் முதல் சுற்றில் விலகல் முறையில் மோதி சிறந்த 8 கழகங்கள் சுப்பர் 8 க்கு தெரிவுசெய்யப்பட்டு அவை லீக் முறையில் ஆடி தற்போது Pடயல ழுகக முறையில் இறுதிப்போட்டிக்கு மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க வும் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் வி கவும் தெரிவாகியுள்ளன.
இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சரும் உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான கௌரவ அர்ஜீண ரணதுங்க அவர்களும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாசன் அவர்களும் பேசாலை பற்றிமா மமவி அதிபர் அருட்சகோ ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளரும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன கவுண்சில் உறுப்பினருமாகிய திரு ஞானராஜ் அவர்களும் தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி யுட் குருஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விறுதிப்போட்டியில் இரு அணிகளும் தமது பலப்பரீட்சையைக்காட்ட முயன்றும் போட்டி தொடங்கி 48வது செக்கனில் ஜோண்சன் தலையால் இடித்த கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க சம்பியனாகியது. இரசிக்கத்தக்கதும் பாராட்டத்தக்கதும் விறுவிறுப்பானதுமாக போட்டி காணப்பட்டது. இறுதிவரை போராடியும் வெற்றிக்கிண்ணம் ஜோசவ்வாஸ்நகரிடம் சென்றது. ஆட்டநாயகனாகவும் தொடரின் சிறந்த நாயகனாகவும் 13 கோல்களைப்போட்ட ஜோசவ்வாஸ்நகர் வீரர் ஜோண்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

Reviewed by NEWMANNAR
on
July 05, 2016
Rating:
No comments:
Post a Comment