அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் இடம்பெற்ற முஸ்லீம் மத வெறி ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் தாக்குதலில்! யாழ் தமிழர் ஒருவரும் உயிரிழப்பு....


பிரான்சில் இடம்பெற்ற  முஸ்லீம் மத வெறி ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள்  தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

பிரான்சில் கடந்த வாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில் அகப்பட்ட குறித்த யாழ் வாசி தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மூளை செயல் இழந்து மரணமடைந்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில் வாழ்ந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மூளை செயல்இழந்தபோதிலும் உடம்பின் பல பாகங்கள் நேற்று முன்தினம் செயல்பட்ட நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்த்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் முன்பு இடம்பெற்ற ஓர் அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் தாயார் , மற்றும் உடன் பிறந்த உறவுகள் ஆகியோர் யாழில் வசிக்கின்றனர்.

பிரான்சில் இடம்பெற்ற முஸ்லீம் மத வெறி ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் தாக்குதலில்! யாழ் தமிழர் ஒருவரும் உயிரிழப்பு.... Reviewed by Author on July 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.