240 பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தும் வரிசலுகை.....
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக ஆண்டுக்கு 240 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இது பற்றிய தகவல்கள் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் நடத்திய ஆய்வுகளின் மூலம் வருடாந்த மொத்த தேசிய வருமானத்தில் 2 வீதம் வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்படுகின்றது.
தற்போது மொத்த தேசிய வருமானம் 12000 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
பாரியளவில் வரிச் சலுகை வழங்கப்படுவதன் ஊடாக வருமான இலக்குகளை அடைய முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
240 பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தும் வரிசலுகை.....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment