தனது இறப்பை தானே ஒளிபரப்பு செய்த இத்தாலிய சாகச கலைஞர்: சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்....
இத்தாலிய சாகச கலைஞர் ஒருவர் தமது சாகச நிகழ்ச்சி ஒன்றை பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பு செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது.
இத்தாலியரான Armin Schmieder என்ற 28 வயது சாகச கலைஞர் பல்வேறு சாகசங்களை பொதுமக்கள் பார்வையில் செய்து சாதித்துள்ளார்.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலை முகட்டில் இருந்து சாகசம் மெற்கொள்ள இருப்பதாக அவர் தமது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள ஒரு மலை முகட்டில் இருந்து குதித்து சாகசம் செய்வதை பேஸ்புக் வாயிலாக அவர் பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்துள்ளார்.
தனது உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமெராவை பயன்படுத்தி அவர் பேஸ்புக்கில் தம்மை தொடரும் பயனாளர்களுக்கு இந்த சிறப்பு சாகசத்தை ஒளிபரப்பியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத வகையில் அந்த சாகச நிகழ்வு விபத்தில் முடிந்துள்ளது. மலை முகட்டில் இருந்து குதித்துள்ள அவர் நிலைகுலைந்து விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.
இச்சம்பவத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் ஒரு கணம் ஸ்தம்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட சாகச கலைஞருக்கு என்ன நேர்ந்தது என அவர்கள் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி விசாரித்து வந்துள்ளனர்.
இதனிடையே பேர்ன் நகர பொலிசார் அந்த சாகச கலைஞரின் உடலை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த கலைஞரின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பதை விசாரித்து வருவதாகவும் பேர்ன் மாகாண பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.
சாகச கலைஞரின் நண்பர் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி Armin மிகவும் கைதேர்ந்த சாகச கலைஞர் எனவும், இந்த புதிய சாகசத்தில் அவர் கடந்த ஓராண்டு காலமாக மட்டுமே பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சாகச கலைஞரின் அந்த கடைசி சாகச நேரலையை ஏராளமானோர் கண்டு களித்து வந்தனர். விபத்து நடந்த உடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீட்பு படையினரை அனுப்பி இருந்தும் அவரை உயிருடன் மீட்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என அவரது நண்பர் விட்டு விலகாத அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது இறப்பை தானே ஒளிபரப்பு செய்த இத்தாலிய சாகச கலைஞர்: சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment