அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியதில் இருபத்தினான்கு பேர் காயம்.

கிளிநொச்சி பூநகரி மன்னார் பிரதான வீதியில் இன்று திங்கள் கிழமை இடம்பெற்ற மினிவான் விபத்தில் ஒருவர் இறந்துள்ளதோடு, 26 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மடுவிலிருந்து மன்னார் வீதியின் ஊடாக யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பூநகரி மண்டக்கல்லாறுக்கு அண்மித்த பகுதியில் முற்பகல் பதினொரு மணியளவில் மினிவான் தலைகீழாய் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.


சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை உடனயாக கிளிநொச்சி அவசர கால அம்புலன்ஸ் சேவை மூலம் பூநகரி வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ் போதான வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.


குறித்த மினிவான் தலைகீழாய் பாலம் ஒன்றின் மீது தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது




மடுவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியதில் இருபத்தினான்கு பேர் காயம். Reviewed by NEWMANNAR on August 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.