திருக்கேதீஸ்வரத்தின் சர்ச்சைக்குரிய காணியின் ஆவணத்தை திருச்சபைக்கு வழங்கிய ஜோன் அமரதுங்க
ஈழத்து சிவாலயங்களில் முன்னிலை வகிப்பதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் நாயன்மார்களால் பாடல் பெற்றதுமான திருக்கேதீஸ்வரம் என்பது வெறும் வழிபாட்டுதலமாக மட்டும் நோக்கப்படாமல் மாறாக ஒரு இனத்தின் அடையாளமாகவும் நோக்கப் படுகின்றது.
அந்தவகையில் இவ் ஆலயம் இலங்கைக்கு விஜயன் வருவதற்குமுபாகவே இருந்துவந்ததுடன் தமிழர்களின் இருப்பின் அடையாளமாகவும் திகழ்ந்துவருகின்றது. வெறுமனே இந்துக்களின் வரலாற்றுபதிவாக மட்டுமல்லாது தமிழர்களின் வரலாற்று பதிவாகவுமுள்ள இவ்வாலயத்தின் தொன்மையையும் தனித்துவத்தையும் இல்லாமல் செய்ய திருமூலரால் சிவபூமி எனக்குறிப்பிடப்பட்ட மன்னாரில் இருந்து இந்து தர்மத்தை மழுங்கடிக்க சிலர் எடுத்துவரும் நடவடிக்கையுடன் புதிய நல்லாட்சி அரசாங்கமும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது என்ற சந்தேகம் இந்துக்களிடையே ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திருகேதீஸ்வர காணியில்வேலிபோட்டு சுருவம் அமைக்கப் பட்டுள்ளதாக கூறி இந்துக்கள் பல அமைதிவழி போராட்டங்களையும் பிராத்தனைகளையும் நடத்தியும் இக்காணி தொடர்பில் நீதிமன்றங்களை நாடியும் ஜனநாயக முறையில் தமது புனித பூமியை பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் நிலையில் இந்துக்களையும் அவர்களது உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் நீதிமன்ற வழக்குகளையும் அவமதிக்கும் வகையில் அன்று [15.08.2016] மடுவில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது கிறிஸ்தவ விவகாரம் மற்றும் காணி அமைச்சருமான ஜோன் அமரதுங்கவினால் சர்ச்சைக்குரிய காணியின் உறுதிப்பத்திரம் கிறிஸ்தவ திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளதுடன் இது தொடர்பான செய்திகளும் செய்தித்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது .

இவ்வறிவிப்பு மன்னார் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் இந்துக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தமிழ் தேசியம் என்னும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மன்னாரில் இந்து எதிர்ப்பு அல்லது அழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டுவரும் மன்னாரின் மதத்தலைவர் ஒருவருக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பும் செல்வாக்குமே இதில் வெற்றிகண்டுள்ளது எனவும் இந்துக்கள் அனாதைகளாக்கப்பட்டுவிட்டனர்
வன்னியின் அரசியல்வாதிகள் பலர் பிறப்பில் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இடையில் கிறிஸ்தவத்தை பின்பற்றியவர்கள் என்பதாலும் அவர்கள் இந்துக்களையும் அவர்களது உணர்வுகளையும் புறக்கணித்து வருகின்றனர் இதன் விளைவே இந்துக்கள் தமது பாரம்பரிய பூமியை இழக்கும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.
ஏனைய மதத்தவர்கள் தாங்களது மதத்தை முன்னிலைப்படுத்தி வாழும்போது இந்துக்கள் மட்டும் தாம் தமிழர்கள் என எண்ணி பொதுவாக வாழ்வதுடன் தேர்தல் காலங்களிலும் மதங்களை கடந்து வாக்களித்ததன் விளைவை தற்போது அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உண்மையிலேயே இந்த அரசாங்கம் நீதியான அரசாக இருந்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பிருந்தே இந்துக்களால் போற்றப்பட்டுவரும் இவ்வாலயத்தையும் அதன் புனிதத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென்பதே அனைவரினதும் அவா.
மன்னார் இந்து மக்கள் ஒன்றியம்
திருக்கேதீஸ்வரத்தின் சர்ச்சைக்குரிய காணியின் ஆவணத்தை திருச்சபைக்கு வழங்கிய ஜோன் அமரதுங்க
Reviewed by NEWMANNAR
on
August 22, 2016
Rating:

No comments:
Post a Comment