அண்மைய செய்திகள்

recent
-

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்! காரணத்தை அலசும் நீதிமன்றம்....


பிரித்தானியாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Derbyshireல் 46 வயதான Wendy Potts என்ற பெண் மருத்துவர் அங்குள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் Wendy தனது இணையதளத்தில் தனக்கு bipolar disorder நோய் இருப்பதாகவும், அதனால் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த நோயாளி ஒருவர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான Wendy தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் அவரது சஸ்பெண்டும் நீக்கப்பட்டது. ஆனால் Wendy அவரது உறவினர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இது தொடர்பான வழக்கு chesterfield நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மருத்துவர் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wendyன் தாய் Joan கூறுகையில், எனது மகள் வினோதமாக நடந்து கொண்டாள். கத்திக் கொண்டே முதுகு குப்புற விழுவாள், வித்தியாசமாக பேசுவாள். அவர் அதற்கு முன் அப்படி இருந்து நான் பார்த்தில்லை என்று தெரிவித்தார்.

அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் நிலையில், அவர் bipolar disorder நோயால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் இறந்ததாக கூறப்பட்டு வருகிறது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்! காரணத்தை அலசும் நீதிமன்றம்.... Reviewed by Author on August 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.