அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பக வளாகத்தில் தென்னங்கன்றுகள் நடுகை நிகழ்வு- பிரதேச செயலாளா் மாந்தை மேற்கு


கல்விக்கான சேவையினை 08 வருடங்கள் கடந்து 09 வருடத்தில் கால்பதித்து சேவையாற்றி வரும் துரையம்மா அன்பகத்தின் சேவையினை கருத்தில் கொண்டு முதியோர் இல்லம் மற்றும் முன்பள்ளியினை  அமைப்பதற்காக  வழங்கப்பட்ட  காணியில்.....
துரையம்மா அன்பக இயக்குனரின் தாயான துரையம்மாவின் நினைவுநாள் 21.08.2016 அன்றய நாளில் துரையம்மா அன்பக வளாகத்தில்                                        தென்னங்கன்றுகள் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

துரையம்மா அன்பக வளாகத்தில் தென்னங் கன்றுகள் நடுகை நிகழ்வு மு.ப 12.00 மணிக்கு ஆரம்பமாகியது. இன் நிகழ்விற்கு வருகை தந்த
 பிரதம விருந்தினா்-திரு.மாணிக்கவாசகா் ஸ்ரீஸ்கந்தக்குமாா் பிரதேச செயலாளா் மாந்தை மேற்கு

 சிறப்பு விருந்தினா்கள்
 திரு-அ.குணசீலன்  மன்/பாப்பாமோட்டை றோ/பா அதிபா் அவா்களும்   ச.யோகவதி சிறுவா் நன்னடத்தை உத்தியோகா் மாந்தை மேற்கு பிரதேச செயலகம்  அவா்களும்
இம்மனுவேல் கிராம சேவகா் பாப்பாமோட்டை அவா்களும்
S.C.M குருஸ் ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலகா் அவா்களும்
E.டெலிஷன் டிஷாந்த் கிராம சேவகா் தேவன் புட்டி  அவா்களும்
மற்றும் துரையம்மா அன்பக உறுப்பினா்களும் கிராம மக்களும் கலந்து சிறப்பித்தனா்.
முதல் நிகழ்வாக  திரு.மாணிக்கவாசகா் ஸ்ரீஸ்கந்தக்குமாா் பிரதேச செயலாளா் அவா்கள் தென்னங்கன்று நடுகையிட்டாா் அதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த அனைத்து விருந்தினர்களும் மிகவும் மனமகிழ்வுடன் தென்னங்கன்றுகளை நடும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


























துரையம்மா அன்பக வளாகத்தில் தென்னங்கன்றுகள் நடுகை நிகழ்வு- பிரதேச செயலாளா் மாந்தை மேற்கு Reviewed by Author on August 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.