அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு- ஒருவர் கைது.-Photos

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரை நேற்று(24) புதன் கிழமை மாலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.


மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து,மன்னார் மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தலைமையில் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ரி.எஸ்.டி.ராஜபக்ஸ,பொலிஸ் சரயன்களான வடுகே(25350), றிபாச்(5627),பொலிஸ் கொஸ்தபிள்களான றொசான் (40735),ரத்னாயக்க(71580),பண்டார(44198), அஸங்க (80846), பொலிஸ் சாரதி வசந்த (80873) பொலிஸ் குழுவினரே குறித்த ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸ் குழுவினர் நேற்று புதன் கிழமை மாலை 4.15 மணியளவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கட்டையடம்பன் பாலப்பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து முதலில் 723 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி மீட்டப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது குறித்த சந்தேக நபர் சிறுத்தோப்பில் அமைத்துள்ள மீன் வாடியில் பதுக்கி வைத்திருந்த மேலும் 272 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி மீட்கப்பட்டது.

சுமார் 996 கிராம் எடை கொண்ட குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுமதி ஒரு கோடி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது 3 கிலோ 329 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதியும் மீட்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும்,மேலதிக விசாரனைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் மேலும் தெரிவித்தார்.





மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு- ஒருவர் கைது.-Photos Reviewed by NEWMANNAR on August 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.