அண்மைய செய்திகள்

recent
-

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு 10 கி.மீ நடந்த கணவன்! ஏழ்மையின் கோரம்!

ஒடிசா மாநிலம் - கலஹன்டி பகுதியில் கணவர் ஒருவர், இறந்துபோன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து கொண்டு தனது மகளுடன் 10 கி.மீ நடந்து சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கலஹன்டி பகுதியைச் சேர்ந்த தனா மஜி என்பவர், தனது மனைவியான அமன்கடி டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆனால் 60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதியை செய்து கொடுக்கவில்லை.

ஏழையான தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு எடுக்கவும் வசதியிருக்கவில்லை.

இதையடுத்து, தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்துகொண்டு, தனது மகளுடன் ஊருக்கு நடந்து செல்ல ஆரம்பித்துள்ளார்.

சுமார் 10 கி.மீ கடந்த நிலையில் உள்ளூர் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீதம் உள்ள 50 கி.மீ தொலைவுக்கு இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசால், அரசு மருத்துவமனையில் இருந்து இலவசமாக பூத உடலை கொண்டு செல்ல 'Mahaparayana' என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு 10 கி.மீ நடந்த கணவன்! ஏழ்மையின் கோரம்! Reviewed by NEWMANNAR on August 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.