காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சட்டமூலம் ஒரு அங்கீகாரம்! சுமந்திரன் எம்.பி.....
காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு சட்டமூலமொன்று அரசினால் கொண்டு வரப்பட்டிருப்பது நபர்கள் காணாமல் போயுள்ளனர் என்பதற்கு கிடைத்திருக்கும் முதலாவது அங்கீகாரம் என்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், காணாமல் போனமை குறித்து சான்றிதழ் வழங்குவதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் அரசினால் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே கட்டாயப்படுத்தி வழங்கப்பட்ட காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் மீளபெறப்பட்டு அதற்கு பதிலாக காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்குவதற்கான திருத்தமொன்றை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், “காணாமல் போனமை குறித்த சான்றிதழை பெற வேண்டாம் என்றும், அதை பெற்றால் காணாமல் போனவர்கள் மரணித்து விட்டதாக கூறி விசாரணைகள் நடத்தப்படாது என்றும் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதை பாதிக்கப்பட்ட மக்கள் நம்ப கூடாது. இந்த சான்றிதழை வழங்குவதன் மூலம் உங்களது உறவுகள் காணாமல் போயுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சட்டமூலம் ஒரு அங்கீகாரம்! சுமந்திரன் எம்.பி.....
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment