காரமான சோஸ்ஸில் ஒரு குளியல்: இப்படியும் ஒரு சாதனை ....
சாதனை செய்ய வேண்டும் என நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வித்தியாசமான முறையில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் Cemre Candar.
காரமான சோஸ்ஸில் குளித்தது தான் இவர் செய்த சாதனை, இப்படி ஒரு வித்தியாசமான சாதனையை செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல, ஏனெனில் இதற்கு முன்னர் உருகிய சொக்லெட்டில் நீச்சலடித்த இவர், தற்போது இரண்டாவது முறையாக இந்த சோஸ் குளியலை கையில் எடுத்துள்ளார்.
பல்வேறு வாளிகளில் நிரப்பட்டுள்ள காரமான சோஸ்கனை, குளிக்கும் தொட்டியில் நிரப்புகிறார். அதன் பின்னர் அந்த தொட்டிக்குள் உருண்டு பிரளும் இவர், எரிச்சல் தாங்க முடியாமல் கத்துகிறார், மேலும் முகத்தினையும் சோஸ்க்குள் முக்கி எடுத்ததில், அவரது வாயுக்குள்ளும் சோஸ் சென்றுவிடுகிறது.
இந்த சாதனையை செய்வதற்கு இவருக்கு 1,250 பாட்டில் சோஸ்கள் தேவைப்பட்டுள்ளது, இதனால் சோஸ் மற்றும் அதற்கான பணம் வீணாகிவிட்டதே என கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அந்த சோஸ்கள் அனைத்தும் கலாவதியான சோஸ்கள் ஆகும்.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெளியான இந்த வீடியோவை 2.4 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர்.
இவரது முந்தைய சாதனையான, சொக்லேட்டில் நீச்சலடித்த வீடியோ மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதையடுத்து, இவர் தற்போது இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார்.
காரமான சோஸ்ஸில் ஒரு குளியல்: இப்படியும் ஒரு சாதனை ....
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment