லட்சுமி ராமகிருஷ்ணனின் டிவி நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை?--
இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் டிவியில் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்துகிறார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குடும்பத்தினர் புகார்.
இது தொடர்பாக நாகப்பன் குடும்பத்தினர் கூறுகையில், மகள்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்றுத் தருகிறோம் என பொய் கூறித்தான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நாகப்பனை அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவரிடம் நிகழ்ச்சி பதிவு செய்யப்படுகிறது என்பதை பற்றி எதுவும் சொல்லாமல் உள்ளே போங்க என்று மட்டும் சொல்லி தள்ளிவிட்டிருக்கின்றனர்.
பின்னர், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யமாட்டோம் என உறுதியளித்தனர். அதையும் மீறி ஒளிபரப்பியதாலேயே நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்... எங்களுக்கு நீதி வேண்டும் என்று குமுறியுள்ளனர்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் டிவி நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை?--
Reviewed by NEWMANNAR
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment