நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ்.....சானியா ஜோடி அசத்தல் வெற்றி....
நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ருமேனியாவின் மோனிகா நிகுலஸ்கு ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. அந்தஸ்து பெற்ற நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது.
இந்த தொடரில் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ருமேனியாவின் மோனிகா நிகுலஸ்கு ஜோடி, உக்ரைனின் கடேரினா பாண்டர்ன்கோ மற்றும் சீனா தைபேயின் சியா-ஜங் சுவாங் ஜோடியை எதிர்கொண்டது.
ஒரு மணி நேரம் 30 நிமிடம் வரை நீடித்த இப்போட்டியில் அசத்தலாக ஆடிய சானியா, மோனிகா ஜோடி 7-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இது இந்த ஆண்டு பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா வென்ற 7-வது பட்டமாகும். இந்த ஆண்டு நடைபெற்ற பிரிஸ்பேன், சிட்னி, அவுஸ்திரேலிய ஓபன், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், இத்தாலிய ஓபன், சின்சினாட்டி, நியூ ஹெவன் ஓபன் தொடர்களின் இரட்டையர் பிரிவில் சானியா பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ்.....சானியா ஜோடி அசத்தல் வெற்றி....
Reviewed by Author
on
August 29, 2016
Rating:
Reviewed by Author
on
August 29, 2016
Rating:


No comments:
Post a Comment