மீண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீட்பு!
ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியதரைகடல் பகுதியில் இருந்து படகுகள் மற்றும் 8 சிறிய படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அகதிகள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, இந்த வருடத்தில் 105,342 அகதிகள் படகு மூலம் இத்தாலி சென்றுள்ளார்கள் என்றும்,சிலர் லிபியா சென்றடைந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பயணங்களின் போது 2,726 ஆண்கள்,பெண்கள் உட்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்றும் இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வறுமை மற்றும் வன்முறைகளுக்கு பயந்த வட ஆபிரிக்காவில் இருந்து 4 இலட்சம் அகதிகள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீட்பு!
Reviewed by Author
on
August 29, 2016
Rating:

No comments:
Post a Comment