அண்மைய செய்திகள்

recent
-

உலகப் பிரபலங்களின் அந்தரங்க விவகாரங்கள்!


பிரபலங்களாக இருப்பதே தலைவலியானது, அவர்கள் என்ன செய்தாலும் பெரிய அளவில் பேசப்படும்.

இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முக்கிய பங்கு வகிப்பர். அவர்கள் தவறாக வாயை விட்டால் கூட நார்நாராக கிழித்து விடுவார்கள்.

அதிலும் அவர்கள் கள்ளக்காதல், பல திருமண விவகாரங்களில் சிக்கினால் சொல்லவா வேண்டும். அப்படி காதல் விவகாரங்களில் சிக்கிய சிலரைப் பற்றி பார்க்கலாம்.

பில் கிளிண்டன்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டனை திருமணம் செய்திருந்த போதிலும், Intern-ஆக வெள்ளை மாளிக்கைக்கு வந்திருந்த 22 வயது Monica Lewinsky என்ற பெண்ணிடம் காதல் வயப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1998ம் ஆண்டு நடந்தது.



ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவும், Mountbatten மனைவி Edwina Mountbatten இடையே பல கிசுகிசுக்கள் பரவ இருக்கின்றன. இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தை வலம் வருகிறது. ஆனால் இவர்கள் மத்தியில் தவறான உறவு ஏதும் இல்லை, இவர்கள் ஆன்மீக ரீதியான கருத்துக்களை தான் பகிர்ந்துக கொண்டதாக மவுண்ட்பேட்டனின் மகள் ஒரு கடிதத்தை வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.


ஜான். எப். கென்னடி

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி, மர்மமான முறையில் இறந்த அமெரிக்க நடிகை Marilyn Monroeவிடம் காதல் உறவில் இருந்தார் என கூறப்படுகிறது. இவர்கள் 1962ம் ஆண்டு நியூயார்க்கில் ஒரு டின்னரில் தான் முதன்முறை பார்த்துக் கொண்டனர்.


பிரான்சுவா ஹாலண்ட்

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான Francois Hollande மூன்று முறை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகை Julie Gayet உடன் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. இவர் பாரிஸில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட்டில் இந்த நடிகையை அடிக்கடி சந்தித்து வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்

உலகின் பிரபல நடிகரும் அமெரிக்க ஆளுநருமான Arnold Schwarzenegger, Mildred Patricia எனும் இவரது பணிப்பெண்ணுடன் நீண்டகால காதல் உறவில்இ ருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது மனைவியை பிரிந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.


திக்விஜய் சிங்

கடந்த வருடம் இவரைப் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். பிரபல அரசியல்வாதியாக கருதப்படும் திக்விஜய் சிங் டிவி தொகுப்பாளினி அம்ரிதா ராயுடன் காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரத்தில் இவர் பல குற்றசாட்டை எதிர்கொண்டார். இறுதியில் கடந்த வருடம் அம்ரிதா ராயை திருமணம் செய்துக் கொண்டார்.


சசி தரூர்

இந்திய ஊடகத்தில் சசி தரூர் மற்றும் சுனந்தா புஷ்கரின் காதல் கதை தான் ஹாட் டாப்பிக். சசி தரூர்ன் மூன்றாவது மனைவி சுனந்தாவின் மரணம் இன்றளவும் மர்மமாக தான் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.














உலகப் பிரபலங்களின் அந்தரங்க விவகாரங்கள்! Reviewed by Author on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.