18 ஆண்டுகளாக சாப்பாடு இல்லை! உயிர் வாழும் அதிசய பெண்.....
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 48 வயதான பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் பிளாக் டீ மட்டும் குடித்து நலமாக வாழ்ந்து வரும் சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி பாய் என்ற பெண் சிறுவயதில் பாட்னாவிற்கு படிக்க சென்ற போது உணவு அருந்துவதையே தவிர்த்திருக்கிறார், அதிலிருந்து சாப்பிடுவதே இல்லை.
1995ம் ஆண்டு பீலி பாய்க்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பீலி பாய்க்கு எந்த குறையும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பீலி பாய் குடும்பத்தினர் கூறுகையில், அவர் 18 ஆண்டுகளாக எந்த உணவும் உட்கொள்ளாமல், தினமும் இரண்டு அல்லது மூன்று கப் பிளாக் டீ மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளனர்.
பீலி பாய் 18 ஆண்டுகளாக பிளாக் டீ குடித்து எடை குறையாமல் நலமாக உயிர் வாழ்ந்து வருவது டாக்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், வெறும் பிளாக் டீ குடித்து உயிர்வாழ்வது சாத்தியமல்ல, சத்து குறைபாடு ஏற்படும் போது மருந்து உட்செலுத்தவதாக தெரிவித்துள்ளனர். இவரை மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் பிளாக் டீ பெண் என்றே அடையாளம் காண்கின்றனர்.
18 ஆண்டுகளாக சாப்பாடு இல்லை! உயிர் வாழும் அதிசய பெண்.....
Reviewed by Author
on
August 24, 2016
Rating:

No comments:
Post a Comment