அண்மைய செய்திகள்

recent
-

நடுக்கடலில் தத்தளித்து பலியான 2726 அகதிகள்! அதிர்ச்சி தகவல்....


உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு வருவதால் படகு நடுக் கடலில் கவிழ்ந்து நடக்கும் விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது.
மத்திய தரைக்கடல் வழியாக வரும் அகதிகள் படகுகள் இது போன்ற விபத்துக்களை அதிகம் சந்திக்கின்றன. அவ்வாறு நடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை இத்தாலி கடலோர காவல் படையினர் மீட்டு வருகின்றனர்.
இந்த வகையில் சிசிலி ஜலசந்தியில் நேற்று மட்டும் 30 இடங்களில் நடைபெற்ற மீட்பு பணியில் சுமார் 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல் படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இதேபோல் இதற்கு முந்தைய 2 தினங்களில் 7600 பேரும் நடுகடலில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இத்தாலிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக வந்திருப்பதாகவும், அவர்களில் பலர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இது போன்ற ஆபத்தான கடல் பயணத்தின் போது 2726 பேர் பலியாகியிருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நடுக்கடலில் தத்தளித்து பலியான 2726 அகதிகள்! அதிர்ச்சி தகவல்.... Reviewed by Author on September 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.