அண்மைய செய்திகள்

recent
-

பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன?


“ஒரு பட்டாம்பூச்சி படபட வென இந்த திசையில் பறந்தால் இப்படி நடக்கும் அதுவே படபட வென மறுபக்கம் பறந்தால் இப்படி நடக்கும்” என்னடா இவன் முட்டாள் மாதிரி பேசுகின்றான் என நினைகாதீர்கள்.

உலகில் சிலரால் அறியபட்டாலும் பலரால் அறியபடாத, ஏற்றுக்கொள்ள முடியாத விதி தான் “வண்ணத்துப்பூச்சி விளைவு”

எங்கோ நிகழும் ஒர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மற்றொரு இடத்தில் ஒர் புயலை ஏற்படுத்தலாம்.

அதாவது, ஒர் நிகழ்வின் போக்கும் தாக்கமும், அதன் ஆரம்ப கணத்தின் நுண்ணிய நிகழ்வுகளைச் சார்ந்துள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவின் சுருக்கம்.
ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz 1963 இல், இதை “பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒர் வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு”என்றார்.

இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதன் காரணமாகவே இத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.

வண்ணத்திப்பூச்சி விளைவு பொதுவாக சுய சிந்தனை அற்ற ஒர் அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகின்றது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது ஐயத்துக்குரியது.

வண்ணத்துப்பூச்சி விளைவுகளை Domino effect, Snowball effect விளைவுகள் சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) என்ற பொதுவான தன்மையாகவும் குறிப்பிடலாம்.

Domino effect

பல சிறிய Domino கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி, ஒன்றைத் தட்டும்போது, எல்லாமே அடுத்தடுத்து விழும். இதுவே Domino விளைவு ஆகும். ஒருவர் பேசுவது எமது காதில் ஒலியாகக் கேட்பதும் Domino விளைவேனலாம்.
Snowball effect

இது Domino effect போன்றதுதான், ஆனால் வித்தியாசம் ஒரு செயலால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் விளைவு அனைத்து திசையிலும் பரவி இருக்கும்.

பனி படர்ந்த மலையின் உச்சத்தில் இருந்து ஒரு கையளவு உள்ள பனி உருண்டை கீழே விழும்போது, அந்தச் சிறிய பனி உருண்டை, உருண்டு அண்மையில் இருக்கும் பனிகளையும் தன்னுடன் சேர்த்து, போகப்போக பெரிய பனி உருண்டையாக மாறுகின்றது. கடைசியில் இது மிகப்பெரிய பனிச்சரிவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

இந்த வண்ணத்துப்பூச்சி விளைவினை மிக எளிமையாக விளக்கிய ஓர் மிகச்சிறந்த திரைப்படங்கள் தான் கமல்ஹாசனின் தசாவதாரம். மற்றும் ஜில் ஜங் ஜக்.
 





பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன? Reviewed by Author on September 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.