அண்மைய செய்திகள்

recent
-

தாய்வானில் கடும் சூறாவளி அச்சத்தில் மக்கள்...


இன்று தாய்வானில் கடுமையான சூறாவளி தெற்குக் கடற்கரையைத் தாக்கிவருகின்றது.

வலுவான காற்றுடன் கரையிறங்கியுள்ள அது, ஆகக் கடுமையான 5ஆம் நிலைச் சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2013ஆம் ஆண்டு ஃபிலிப்பீன்ஸில் 6,000 பேரைப் பலிவாங்கிய Haiyan சூறாவளிக்கு நிகரான வலுவில் இச்சூறாவளி வீசுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தைவான் விமான பயணங்கள் தடைபட்டுள்ளதோடு தைவானியப் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.கரையோரத் தீவுகளிலிருந்து சுமார் 1,500 அதிகமான சுற்றுப்பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதிகமான வீடுகளில் மின்வசதி தடைபட்டுள்ளதோடு மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகளுக்காக உதவ 4000 அதிகமான இராணுவ வீரர்கள் தயார்நிலையில் இருப்பதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்வானில் கடும் சூறாவளி அச்சத்தில் மக்கள்... Reviewed by Author on September 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.