அண்மைய செய்திகள்

recent
-

முதன் முறையாக Bar mitzvah கொண்டாடவிருக்கும் உலகின் வயதான மனிதர்.....


இரண்டு உலகப்போர் மற்றும் நாஜிக்களின் சித்திரவதை முகாமில் இருந்தும் தப்பிய 113 வயது முதியவர் ஒருவர் Bar mitzvah எனும் மதச்சடங்கை முதன் முறையாக கொண்டாட ஆயத்தமாகிறார்.

Bar mitzvah எனப்படுவது யூத இனத்தவர்கள் கொண்டாடும் ஒரு சிறப்பு விழாவாகும். யூத சிறுவர்கள் 13 வயதை கடக்கும்போது குறிப்பிட்ட குடும்பத்தினர் இந்த விழாவினை மிக விமரிசையாக உற்றார் உறவினர்களை கூட்டி வைத்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் போலந்தில் பிறந்த இஸ்ரேல் கிறிஸ்டல் என்பவருக்கு 13 வயதானபோது முதல் உலகப்போர் துவங்கியது. அந்த களேபரத்தின் நடுவே உற்றார் உறவினர்களை அழைத்து பெரும் விருந்து ஏற்பாடு செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

மட்டுமின்றி அவரது தந்தை ரஷ்ய ராணுவத்தில் அப்போது பணி புரிந்து வந்துள்ளார். தாயாரும் இவர் 10 வயதாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். இதனால் பின்னர் ஒரு பொழுதில் விழாவினை சிறப்பிக்கலாம் என குடும்பத்தினர் இவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

கிறிஸ்டல் இளைஞரான பின்னர் மீண்டும் ஒரு உலகப்போரினை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. 1944 ஆம் ஆண்டு ஜேர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் போலந்து இருந்ததால் யூதர் என்பதால் Auschwitz முகாமில் கிறிஸ்டல் அடைக்கப்பட்டார்.

அந்த சித்திரவதை முகாமில் இவரது முதல் மனைவி மற்றும் 2 குழந்தைகள் பலியாகின. கூட்டுப்படையினரால் பின்னாளில் வெளியேற்றப்பட்ட இவருக்கு அப்போது வெறும் 37 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது.

தற்போது 113 வயதாகும் கிறிஸ்டல் முதன் முறையாக Bar mitzvah விழாவினை கொண்டாட முடிவு செய்துள்ளார். அவருடன் இணைந்து இந்த கொண்டாட்டங்களுக்கு அவரது பிள்ளைகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆனால் இந்த 113 ஆம் வயதில் 13 வயதில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்காது என்றே கிறிஸ்டல் கூறுகிறார். கடந்த மார்ச் மாதம் உலகின் மிகவும் வயதான நபர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரை அறிவித்துள்ளது.



முதன் முறையாக Bar mitzvah கொண்டாடவிருக்கும் உலகின் வயதான மனிதர்..... Reviewed by Author on September 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.