புதுமைகள் பல கோடி புனித அந்தோனியாருக்கு பேசாலை லூர்து அன்னை பாட்டில் சிற்றாலயம்.......
மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க மீனவ சமூகம் செறிந்து வாழும் பேசாலை என்னும் பகுதியில் 'கெபிபாடு' என அழைக்கப்படும் 'லூர்துபாடு' என்ற கடற்கரையோரத்தில் புனித அந்தோனியார் சிற்றாலயம் ஒன்று நிர்மானிக்கப்பட்டு செவ்வாய் கிழமை (13.09.2016) பேசாலை பங்கு தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ சில்வா அடிகளாரும், உதவி பங்கு தந்தை பெயிலன் குரூஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து இவ் ஆலயத்தை ஆசீர்வதித்து வழிபாட்டுக்காக திறந்து வைத்தனர்.
புனித அந்தோனியாரில் கத்தோலிக்கர் மட்டுமல்ல பிறசமயத்தவரும் பக்தி கொண்டவர்கள் அதிலும் மீன்களை கரைசேர்ப்பதில் புதுமை செய்யும் புனித அந்தோனியாரில் பக்தி கொண்ட மீனவ சமூகம் கடற்கரையோரத்தில் புனித அந்தோனியாரின் திருச்சுரூபத்தை ஸ்தாபித்து வழிபடுவது வழமையில் ஒன்றாகும்.
அந்தவகையில் இவ்விடத்திலும் இவரின் திருச்சுரூபம் பல வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டு இருந்தபோதும் வழிபாட்டுக்கு உகந்த இடமாக இல்லாததின் காரணமாக இவ்விடத்தில் தொழில்புரியும் மீனவர்கள் குறிப்பாக கெபிபகுதி மக்கள் இவ்விடத்தில் ஒரு சிற்றாலயம் நிர்மானிக்கப்பட வேண்டும் என அவாவில் பலரின் உதவிகளுடன் ஒரு சிறந்த சிற்றாலயத்தை நிர்மானித்துள்ளனர்.

புதுமைகள் பல கோடி புனித அந்தோனியாருக்கு பேசாலை லூர்து அன்னை பாட்டில் சிற்றாலயம்.......
Reviewed by Author
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment