மன்/தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலையில் பூரணசந்திரக்கலை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் மடு வலய கல்வி அலுவலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட பூரணசந்திரக்கலை விழா ஆனது 16-09-2016 புரட்டாதித் திங்கள் 16 ஆம் நாள் மன்/தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் விருந்தினராக மடு பிரதேச செயலாளர் உயர் திரு F.C.சத்திய சோதி அவர்களும்,
சிறப்பு விருந்தினராக உயர் திரு M.A.றெவ்வல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு இன்னிய இசை முழங்க வரவேற்கப்பட்டு விழா மண்டபத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டனர். அங்கு முதலில் மங்கல விளக்கு ஏற்றப்பட்ட பின்னர் மும்மத வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பித்தன.
நிகழ்வுகளில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் தமிழர்களின் கலைகளையும் தமிழின் பெருமையையும் வெளிக்காட்டும் வகையிலும் நிகழ்வுகள் அமைந்திருந்தன. இவற்றில் பரதநாட்டியம், உழவர் நடனம், நாடகம், நாட்டிய நாடகம் , வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து , நாட்டார் பாடல், எனப் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வுகளில் சிறப்பம்சமாக கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மன்/தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலையில் பூரணசந்திரக்கலை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Reviewed by Author
on
September 17, 2016
Rating:

No comments:
Post a Comment