கபடிப்போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மன்னார் கட்டையடம்பன் மளுவராயர் றோ.க.த.க.பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.-படங்கள்
அண்மையில் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் இடம் பெற்ற 15 வயதிற்குற்பட்ட வீரர்ளுக்கான கபடிப்போட்டியில் கலந்து கொண்ட மன்னார் கட்டையடம்பன் மளுவராயர் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
குறித்த தேசிய சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று(16) வெள்ளிக்கிழமை மாலை மளுவராயர் கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது குறித்த சாதனையை நிலையாட்டிய மன்னார் கட்டையடம்பன் மளுவராயர் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 10 பேரூம்,பயிற்சி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரி கள், சமூக ஆர்வலர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது கபடிப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு பெறுமையை பெற்றுக்கொடுத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கபடிப்போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மன்னார் கட்டையடம்பன் மளுவராயர் றோ.க.த.க.பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
September 17, 2016
Rating:
No comments:
Post a Comment