வடமாகாண முதலமைச்சரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - உதய சீற்றம்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வானது அரச சொத்துக்களைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய வரலாற்றில் முதல் தடவையாக அரச சொத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் பிரிவனைவாதிகள் இவ்வாறானதொரு பேரணியை ஏற்பாடு செய்திருந்ததாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பிட்டகோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே இனவாதத்தை தோற்றுவிக்க முயலும் விக்கினேஸ்வரன் போன்றோர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - உதய சீற்றம்
Reviewed by Author
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment