14 வயது சிறுவனை திருமணம் செய்த 15 வயது சிறுமி: பிரசவத்தின்போது பலியான பரிதாபம்....
துருக்கி நாட்டில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 14 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததை தொடர்ந்து பிரசவத்தின்போது சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு துருக்கியில் உள்ள பேட்மேன் என்ற நகரில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 14 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த திருமணத்தை தொடர்ந்து விரைவில் அச்சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார்.
பின்னர் பேட்மேன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் பிரசவத்திற்காக சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், பிரசவத்தின்போது சிறுமி கடுமையாக போராடியதற்கு பிறகு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சிறுமியின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், குறைந்த வயதில் பிரசவம் ஆனபோது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 வயது சிறுவனை திருமணம் செய்த 15 வயது சிறுமி: பிரசவத்தின்போது பலியான பரிதாபம்....
Reviewed by Author
on
October 18, 2016
Rating:

No comments:
Post a Comment