அண்மைய செய்திகள்

recent
-

இந்திய பாலகன் அமெரிக்காவில் சுட்டுக்கொலை: பதைபதைக்க வைக்கும் சம்பவம்....


அமெரிக்காவில் பேக்கரி கடையில் கொள்ளையடிக்க வந்தவன், அங்கிருந்த 15 வயது பாலகனை சுட்டு கொன்ற சம்பவம் பார்ப்பவர் மனதை பதைபதைக்க செய்துள்ளது.

அமெரிக்காவில் சென்று குடியேறுவதை இந்தியர்கள் பெருமையான விஷயமாக கருதுகின்றனர். அதனால், படிப்பு, வேலை, தொழில் காரணமாக அதிகமானவர்கள் அங்கு குடியேறி வருகின்றனர்.

மகிழ்ச்சியாக அங்கு வாழும்போது, அவ்வப்போது அங்கு நடக்கும் வன்முறைக்கு பலியாகி சிலர் இறந்துபோவதும் பரிதாபகரமாக உள்ளது.

அப்படி ஒரு இறப்புதான் இந்த சன்னி படேலுக்கும் ஏற்பட்டுள்ளது. ரவி காந்திபாய் படேலின் 15 வயது மகனான இந்த சிறுவன் உட்பட குடும்பம் மற்றும் உறவினர்களுடன் ஓஹியோவில் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.

சன்னி படேல் தனது 15 வயதிலும் தனது மாமா, அத்தை நடத்திவரும் மிஸ்டர் ஹீரோ என்ற சாண்ட்விச் கடையில் அவர்களுக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளார்.

கடைக்கு தேவையான பொருள்களை வாங்கிவருவது அவனுடைய வேலையாக இருந்துள்ளது. அவர் பெற்றோராலும் மாமா அத்தையாலும் பாசமாக பராமரித்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று கடையிலிருந்து வீட்டுக்கு சிறிது நேரத்துக்குள் கிளம்பிப்போக தயாராக இருந்துள்ளார்.

அப்போது துப்பாக்கியோடு வந்த கொள்ளையன் ஒருவன் அவனை எந்த எச்சரிப்பும் இன்றி, திடீரென் தலையின் வலது பக்கத்தில் சுட்டு வீழ்த்திவிட்டு கேட்பாரற்று இருந்த கடையின் பணப்பெட்டியை தூக்கிச்சென்றுவிட்டான்.

சுடப்பட்ட பாலகன் தரையில் விழுந்த மறுகணமே உயிர் பிரிந்தான். கொலைகாரனின் உருவம் அங்குள்ள கமெராவில் பதிவாகியுள்ளது.

குற்றவாளியை பொலிசார் தேடிவருகின்றனர். ஆனாலும் இந்த சம்பவம் அமெரிக்க இந்தியர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பாலகன் அமெரிக்காவில் சுட்டுக்கொலை: பதைபதைக்க வைக்கும் சம்பவம்.... Reviewed by Author on October 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.