23 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அழகி மரணம்,,,,
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ரீலதா மேனன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மிஸ் திருவனந்தபுரம் பட்டம் பெற்ற நடிகை ஸ்ரீலதா மேனன், மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் கலக்கிய ஸ்ரீலதா மேனனுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதனால் நடிப்பதை நிறுத்திக் கொண்டதுடன் மருத்துவமனையில் தங்கி தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
பல ஆண்டுகள் ஆகியும் நோய் சரியானபாடில்லை, பணநெருக்கடியால் தவித்தவருக்கு அப்போதைய முதல்வர் உம்மண்சாண்டியும், மலையாள நடிகர் சங்கமும் உதவி செய்தது.
இந்நிலையில் 23 ஆண்டுகள் ஆகியும் சிகிச்சை பலனளிக்காததால், நேற்று மரணமடைந்தார்.

23 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அழகி மரணம்,,,,
Reviewed by Author
on
October 08, 2016
Rating:

No comments:
Post a Comment