அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா...... படங்கள் இணைப்பு

 மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய  கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் கோலாகலமாக அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் தலமையில் 07-10-2016 இடம்பெற்றது.
இதில் 2015 ஆம் ஆண்டில்
மாவட்டம் மாகாணம் தேசியம் ரீதியில் கல்வி விளையாட்டு கலை போட்டிகளில் தமது திறமையினை வெளிப்படுத்திய மாணவ
செல்வங்களுக்கு சான்றிதழ்களுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஸ்ணன், மன்னார் மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா . டெனீஸ்வரன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அரச அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் தனது உரையில் இவ்வாறான நிகழ்வுகள் மாணவச்செல்வங்களை ஊக்கப்படுத்தி மென்மேலும் ஆளுமை கொண்டவர்களை உருவாக்கும். மன்னாரின் அடையாளமாகதிகழும் இக்கல்லூரியானது இன்னும் சிறப்பான பாதையில் செல்ல மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபருடன் இணைந்து செயலாற்றவேண்டும்.
அத்தோடு இக்கல்லூரிக்கு அதிபரின் வேண்டுகோளுக்கினங்க  மூன்று மாடி கேட்போர் கூடத்தினையும் கொண்ட கட்டிடத்தொகுதிக்கான 40மில்லியன் ரூபாவினை ஒதுக்கித்தருவதாகவும் கல்விச்செயற்பாட்டிற்கு தன்னாலன உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்
மாணவர்களின் சிறப்பான ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பாகநிறைவுற்ற்து

 






























மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா...... படங்கள் இணைப்பு Reviewed by Author on October 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.