7,000 ஆண்டுகளுக்கு முன்னரே விமான நிலையம்: பரபரப்பை கிளப்பிய அமைச்சர்.....
புராதன சுமேரியர்கள் 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று ஈராக்கில் அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் காஸீம் பின்ஜன். இவர் ஈராக்கின் தென் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது குறிப்பிட்ட தகவலினை தெரிவித்துள்ளார்.
அந்த விழா நடைபெற்றுவரும் பகுதியில்தான் 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் புராதன சுமேரியர்கள் விமான நிலையம் ஒன்றை கட்டியதாகவும், இங்கிருந்து வேற்று கிரகங்களுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமேரியர்கள் உருவாக்கிய விமாங்கள் அனைத்தும் விண்வெளி ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், புளூட்டோ கோளினை முதன் முதலில் கண்டுபிடித்ததும் சுமேரியர்கள்தான் என்றார்.
இச்சம்பவம் குறித்து கருத்து ஆராய்ச்சியாளர் ஒருவர், தமது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு பேச்சை கேட்டதில்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டிப்பாக எவரும் எதிர் கருத்து கூற முயலமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சுமேரியர்கள் தற்போதுள்ள ஈராக்கின் தென் பகுதியில் குடியேறி வாழ்ந்தது உண்மை என்றும் அது கிறிஸ்து பிறப்பிற்கும் 5500 முதல் 4000 ஆண்டுகளில் நடந்தது எனவும் அந்த ஆராய்ச்சியாளர் தெளிவு படுத்தியுள்ளார்.
ஈராக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள Dhi Qar பகுதியில் இருந்து சுமேரியர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்களையும் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமைச்சரின் விமான நிலைய பேச்சை சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
7,000 ஆண்டுகளுக்கு முன்னரே விமான நிலையம்: பரபரப்பை கிளப்பிய அமைச்சர்.....
Reviewed by Author
on
October 02, 2016
Rating:

No comments:
Post a Comment