அண்மைய செய்திகள்

recent
-

இந்திய அணியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணி....


ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் அணி முறியடித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஒரு நாள் போட்டிகளில் 455 வெற்றிகளை பெற்று அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் மூன்றாவது இடம் வகிக்கிறது.

இது வரை 864 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 455 வெற்றியும், 383 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் அணி தற்போது முறியடித்துள்ளது.

அதாவது 899 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 454 வெற்றிகளை பெற்றுள்ளது. இது பாகிஸ்தான் அணியை விட இந்திய அணிக்கு ஒரு வெற்றி குறைவு என்பதாகும்.

முதல் இடத்தில் அவுஸ்திரேலியா அணி 64.73 சதவீதமும், இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 63.78 சதவீதமும். இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தான் அணி 54.25 சதவீதமும் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணி.... Reviewed by Author on October 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.