மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவச சிறப்பு கருத்தமர்வு(படம்)
இவ்வருடம் க.பொ.த சாதாரதரப் பரீட்சைக்குத் தோற்றும் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச சிறப்பு கருத்தமர்வு இன்று சனிக்கிழமை காலை பண்டி விரிச்சான் மாகா வித்தியாலத்தில் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரின் வழிகாட்டுதலில் அருட்பணி.பாக்கிய ரஞ்சித் நம்பிக்கை நிதியத்தின் அனுசரனையுடன் அமல உற்பவ கன்னி மரியாளின் சமூக மற்றும் கல்விப்பணிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் கணிதம் மற்றும் விஞ்ஞன பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
குறித்த கருத்தமர்வில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதாக அமல உற்பவ கன்னி மரியாளின் சமூக மற்றும் கல்விப்பணிகளுக்கான அமைப்பின் ஸ்தாபகர் ச.கொண்சன்ரைன் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவச சிறப்பு கருத்தமர்வு(படம்)
Reviewed by Author
on
October 01, 2016
Rating:

No comments:
Post a Comment