அண்மைய செய்திகள்

recent
-

கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்து முரண்பாடுகளினால் சிக்கித்திணறும் மாணவமாணவிகள்.....


மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகளில் பிரதானமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மன்னார் வலையங்களில் கீழ் உள்ள பாடசாலைகளின் இடம்பெறும் குறைபாடுகள் பல வகை தான் அதில் முதலாவது குறைபாடு கல்வி கற்றல் கற்பித்தலில் உள்ளது என்பது வேதனைக்குரியது.

கல்வி உயர் அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளினால் சிக்கித்திணறும் மாணவமாணவிகள் சமீபத்தில் மன்.புனித.சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடந்த சம்பவம் இது கல்விச்செயற்பாட்டினை அவதானிப்பதற்கு சென்ற கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான உதவிப்பணிப்பாளர் அவர்களினால் தரம் 8 படிக்கும் மாணவியின் கெப்பியில் வரச்சி என்று எழுதப்பட்டிருந்தததை அடையாளமிட்டு ர க்கு பதிலாக ற வறச்சி என வரவேண்டும் திருத்தியதாடு அந்தப்பக்கத்தினை தனது கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துச்சென்றுள்ளார்.
 இச்சம்பவத்தின் போது அதிகாரிக்கும் ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவும் புகைப்படம் எடுத்தது கண்டு மாணவிகள் பயந்து போயுள்ளனர்.
வரச்சி யை வறச்சி என்று திருத்திக் கூறியுள்ளார் அதிகாரி ஆனால் வறட்சி என்பது தான் சரி ச் என்ற எழுத்துத்தான் தவறானது.

இது சின்னப்பிரச்சினைதான் இருப்பினும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் பெரியவர்களே அதிகாரிகள்......
மன்னாரின் கல்வி நிலையும் அதிகாரிகளின் தரமும் கேள்விக்குறியாகின்றது அப்படியாயின் மாணவமாணவிகளின் நிலை…..

அதிகாரப்போக்கும் அடக்குமுறையும் மாணவர்களின் மனங்களை பாதிக்கும் என்பதை அறியாதவர்களா இவர்கள்.....
அதிகாரிகளும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முழுமையாக செயற்படுவதை விட்டு இப்படியான அற்பத்தனமான காரியங்களை இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க சம்மந்தப்பட் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் பெற்றோர்களின் கோரிக்கையாகும்.


கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்து முரண்பாடுகளினால் சிக்கித்திணறும் மாணவமாணவிகள்..... Reviewed by Author on October 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.