அண்மைய செய்திகள்

recent
-

இலக்கத் தகடு இல்லாத வாகனம் தொடர்பில் நீதிபதி அதிரடி உத்தரவு


மட்டக்களப்பில் இலக்கத்தடு அற்ற வாகனம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக அழைத்து குறித்த விடயம் தொடர்பாக விரைவாக கண்டுபிடித்து உரிய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் நான்கு மாத காலமாக இலக்கத்தகடு அற்ற வானத்தினால் பொது மக்கள் பீதியில் என்ற செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக குற்றத்தடுப்பு பொலிசாரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்ததையடுத்து குறித்த அதிரடி நடவடிக்கையை நீதிபதி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இலக்கத்தகடு அற்ற வாகனம் தொடர்பில் உடனடியாக கண்டுபிடித்து இன்றைய தினம் கைது செய்வதாக குற்றப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இலக்கத் தகடு இல்லாத வாகனம் தொடர்பில் நீதிபதி அதிரடி உத்தரவு Reviewed by NEWMANNAR on October 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.