கிழக்கு மாகாண முதலமைச்சரின் யதார்த்தம் மிகுந்த கருத்து
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நான் நம்பவில்லை.அதிகாரப் பகிர்வு என்ற பேச் சுக்கள் எல்லாம் வெறுமையானவையே என கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் நஸீர் அஹமட் கூறியுள் ளார். அவர் கூறிய இக்கருத்து மிகவும் யதார்த்தமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லாத ஒரு உண்மையை கிழக்கு மாகாணத்தின் முதல மைச்சர் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளார். அவர் கூறியதே நிதர்சனமானது.
2016 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்த நிலையில் இன்னமும் இரண்டு மாதங்கள் மட்டுமே பாக்கி யாகவுள்ளது என்ற கட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் நஸீர் அஹமட்; இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நான் நம்பவில்லை.
மாறாக இது ஒரு காலம் கடத்தும் நடவடிக்கையாகவே கூறப்படுகிறது என்று கருத்துரைத்துள்ளார் எனின் முஸ்லிம் தலைவர்களில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் மட்டுமே யதார்த்தம் இருப்பதைக் காணமுடிகின்றது.
பொதுவில் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் எனவே அதில் தாம் விழிப்பாக இருந்துவிடவேண்டும் என்றும் கருதுகின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் அதிகாரம் எதனையும் தராது ஆட்சி செய்தாலும் பரவாயில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் அதன் பாதியைத் தாங்கள் தட்டிப் பெற்றுவிட வேண்டும் என்பதனிலேயே முஸ்லிம் தலைவர்கள் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்.
அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.சிவசிதம்பரம் அவர்களின் ஜனனதின நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேருரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்; சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்தக் கூடாது எனவும் இலங்கை அரசுடன் சேர்ந்து போய் உரிமையைப் பெறவேண்டும் என்ற சாரப்படக் கருத்துரைத்திருந்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இந்தக் கருத்து இலங்கை அரசு தீர்வு தரும் என்பது போலவும் ஆனால் தமிழ் மக்கள் தான் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கேட்டு எல்லாவற்றையும் குழப்புவது போலவும் அமைந்திருந்தது.
இதில் வேடிக்கை என்னவெனில் அமரர் சிவசிதம்பரத்தின் ஜனன தின நிகழ்வில் உரையாற்றுமாறு அமைச் சர் ரவூப் ஹக்கீமை அழைத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதும் அந்த நிகழ்வில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது இரா.சம்பந்தன் உடன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூற நினைத்ததை அவரின் சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார் என்பதே உண்மை.
ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பூரண நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மாறாக அவர்கள் இருவரினதும் ஒரே விருப்பம் தமிழ் மக்கள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தக்கூடாது என்பதுதான்.
இந்த நிலையில்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு எதனையும் இலங்கை அரசு எட்டமாட்டாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கூறியுள்ளார்.
அவரின் இந்தக் கூற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வீழ்ந்த பலத்த அடியாகும்.
அதிலும் தமிழ் மக்கள் பேரவை மட்டக்களப்பில் நடத்திய முத்தமிழ் விழாவில் மூன்றாவது நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதம விருந்தினராக இருந்த போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சியில் முக்கிய பதவியை வகிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் வலியுறுத்தல் காரணமாக கிழக்கின் முதலமைச்சர் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் இப்படிச் செய்து விட்டாரே என்று வேதனை கொண்ட வேளையில் ஒரு யதார்த்தத்தை தெரிவித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தன்னையொரு யதார்த்தவாதியாக காட்டியமை ஆறுதலை தருகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் யதார்த்தம் மிகுந்த கருத்து
Reviewed by NEWMANNAR
on
October 18, 2016
Rating:

No comments:
Post a Comment