சும்மா பாய்கிறது தண்ணீர்…….முடிவுதான் என்ன…..
மன்னார் மண்ணின் மக்களே உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போதுமான வளம் மன்னார் மண்ணில் உள்ளது நாம் தான் அதை ஒழுங்கான முறையில் பேணிக்காப்பதற்கும் முறையாக வளப்படுத்துவதற்கும் இருக்கும் வளங்களை பாதுகாப்பதற்கும் முடியாதவர்களாய் இல்லை……. முயற்சி செய்யாதவர்களாய் இருக்கின்றோம். எனக்கு என்ன என்று ஒவ்வொருவரும் நினைப்பதால்தான் மன்னார் மாவட்டம் இன்னும் முழமையான வளரச்சி பெறாமல் இருக்கின்றது.
பொதுநிலையினராகிய நாமும் பொறுப்பான பதவிகளில் இருக்கும் அதிகாரிகளும் பொறுப்புணர்வுடனும் பொதுநோக்குடனும் விட்டுக்கொடுத்து அபிவிருத்திப்பணியிலும் ஆக்கப்பணியிலும் இணைந்து செயற்படவேண்டும்…
மன்னார் மண்ணில் பாதுகாத்து புதுப்பிக்க்பட வேண்டிய பணிகள் பலவுள்ளது….
அவற்றுள் ஒன்றைப்பற்றித்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன் உங்களுக்கு தெரியாத விடையம் இல்லை வங்காலை கிராமத்தின் பிரதான நானாட்டான முத்தரிப்புத்துறை செல்லும் பாதையில் அமைந்துள்ளது
பாதையில் வஸ்திபுரம் பகுதியில் இயற்கையான நல்ல தண்ணீர் நீர் ஊற்று பாய்கின்றது அந்த நீர் ஊற்றுக்கு சிறிய குழாய் பொருத்தி விட்டிருப்பதால் சிலர் குளிப்பதற்கும் வாகனங்களை கழுவுவதற்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் பயன்படும் அதேவேளை கால்நடைகளும் பறவைகளும் குடிக்கின்றது. இருந்தும் பெருமளவான நீர் வீண்விரையமாகின்றது. இது இன்று நேற்றல்ல பல வருடங்களாக 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கின்றது.
சம்மந்தப்பட்டவர்கள் அதிகாரிகள் மிகவும் விரைவாக வீண்விரையமாகின்ற நீரை சேமித்து வைப்பதற்கோ அல்லது கால்நடைகள் பறவைகள் அருந்துவதற்கோ மக்களின் தேவைக்கோ நீர்தாங்கிகள் தொட்டிகள் மூலம் பயன்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் இப்படியே விடுவதால் யாருக்கும் எந்தப்பலனும் இல்லை….
தேவைக்கு அவசிமானாலும் தேவையற்றதாய் தெருவில் சிந்தும் நீர் தேடியலைந்தவர்கள் இப்போது வீட்டில் பைப்லைன் இருப்பதால் தெரியாமல் இருப்பதேன்......
சிந்தியுங்கள் நீர் தட்டுப்பாடு மழையின்மையால் வறட்சி ஏற்பட்டு எமது நாட்டிலே சில மாவட்டங்களில் மக்கள் துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள் நாம் எமக்கு கிடைக்கின்ற நீரையே வீண்வியைமாக்கிக்கொண்டிருக்கின்றோம் கண்டும் காணமல் இருக்கின்றோம். துரிதகதியில் செயற்பட்டால் குறகிய காலத்தில் அபாரவளர்ச்சியில் எமது மன்னார் மாவட்டம் முன்னிலை பெறும்…….
சின்னவிடையம் தான் ஆனால் சிந்திக்கவேண்டிய விடையமல்லவா........
-வை.கஜேந்திரன்-
மீண்டும் வருவேன்.......
சும்மா பாய்கிறது தண்ணீர்…….முடிவுதான் என்ன…..
Reviewed by Author
on
October 08, 2016
Rating:

No comments:
Post a Comment