அண்மைய செய்திகள்

recent
-

மாரடைப்பு வந்தால் உடன் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?


முதலுதவிகள்

மாரடைப்பு

இடது தோள்பட்டையில் வலி அல்லது இடதுபக்க மார்புடன் இணைந்து இடது கை வலிக்குமானால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.

இதைத் தொடர்ந்து மூச்சிரைப்பும் மயக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படும்.

வலியை இலேசாக உணரும் போதே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்துக்கொள்வது நன்று.

ஆஸ்பிரின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். தாமதிக்காது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லல் அவசியம்.


வெட்டு காயம்


காயத்தை சவர்க்காரமிட்டு நீரினால் சுத்தமாக கழுவவேண்டும்.

இரத்தம் நிற்கும் வரை காயத்தை அழுத்த வேண்டும். சுத்தமான பேன்டேஜ் துணியை உபயோகித்து காயத்தை கட்ட வேண்டும்.

சிறு காயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

வெதுவெதுப்பான நீரைக்கொண்டு சவர்க்காரமிட்டு நன்றாக கழுவ வேண்டும். இரத்தக்கசிவு இருக்குமாயின் பேன்டேஜ் துணியால் சுற்ற வேண்டும்.


மயக்கம் ஏற்படல்

முன்புறமாக தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே தாழும் போது மூளை பகுதிக்கு இரத்தோட்டம் இலகுவாக செல்லும். பாதிக்கப்பட்ட நபரின் தலை குனிந்த நிலையிலும், கால்களை உயர்த்திய நிலையிலும் படுக்கவைக்க வேண்டும். ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இடல் வேண்டும்.


வலிப்பு
குறித்த நபரின் அருகில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்.

திரவங்கள் எதனையும் அருந்தக் கொடுத்தலாகாது. தலைக்கு தலையணை அல்லது மென்மையான எதையாவது வைக்க வேண்டும்.

மூச்சு எடுக்க சிரமப்பட்டால் சுவாசப்பையில் தடை உள்ளதா என பார்க்க வேண்டும். நன்றாக காற்றோட்டம் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

விஷம் அருந்தியிருந்தால்

மருத்துவரின் அனுமதியின்றி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கொடுக்கக் கூடாது.

மருத்துவரை உடனடியாக அனுகுதலே நன்று. மருத்துவரின் ஆலோசனையின்றி விஷம் அருந்திய நபரை வாந்தியெடுக்கச்செய்தலாகாது.

நெருப்புக்காயம்

நெருப்பு காயம் பட்ட இடத்தை உடனடியாக குளிர்ந்த நீரில் நனைக்க வேண்டும். தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

உடனேயே மருத்துவரை அணுகுதல் வேண்டும். ஆனால் மிக ஆழமான நெருப்புக்காயங்களை நீரில் நனைத்தல் கூடாது. இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும்.

காயத்தை கிருமி நீக்கிய சுத்தமான பேன்டேஜ் துணியினால் மூட வேண்டும்.

அமிலம் பட்டால்

இரசாயனப்பொருட்கள் பட்டுவிட்டால் அந்த இடத்தை ஓடும் நீரினால் அண்ணளவாக 20 நிமிடங்கள் வரையில் கழுவ வேண்டும். பின்பு வைத்தியரை அனுக வேண்டும்.

மின்சாரம் தாக்கினால்


உடனே மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். மின்னை துண்டிக்காமல் மின்சாரம் தாக்கியவரை தொடக்கூடாது.

மின் பாயாத ஏதாவது பொருளினை (மரக்கட்டை,பிளாஸ்டிக் பொருட்கள்) கொண்டு அவருடன் ஏற்பட்டுள்ள மின் தொடர்பினை துண்டிக்க வேண்டும் . உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.

பிராணிகள் தீண்டினால்

விஷம் மிக்க பிராணிகள் கடித்தால் ஆபத்து. விஷப்பாம்பு தீண்டினால் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.

கடிபட்ட இடத்தை தாழ்வாக வைத்திருக்க வேண்டும்.கடிபட்ட இடத்தை சவர்க்காரமிட்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். முதலுதவி செய்பவர் பாதிக்கப்பட்ட இடத்தை கீறவோ, வாய் வைத்து உறிஞ்சவோ கூடாது.

மூச்சுத்திணறல்


உணவு உண்ணும் போது சில வேளைகளில் உணவுத் துண்டுகள் உணவுக்குழாயில் சிக்கிக்கொள்வதால் மூச்சு விடமுடியாத நிலைமை தோன்றக்கூடும். முதலில் முதுகில் தட்ட வேண்டும்.

இவ்வாறான நிலைமைகள் தோன்றும் போது எதனையும் அருந்தவோ சாப்பிடவோ கொடுத்தலாகாது.

மாரடைப்பு வந்தால் உடன் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? Reviewed by Author on October 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.