உண்மையா..? வதந்தியா..? தமிழக முதலமைச்சர் குறித்த அதிர்ச்சி ரிசல்ட்..!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் முதல் அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில், சிறிய கட்சித் தலைவர்களின் வருகையில் தொடங்கிய அப்பல்லோ விசிட், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை வளர்ந்து, மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், கவர்னர்கள் எனத் தொடர்கின்றது.
ஆனாலும் யாரும் முதல்வரை சந்திக்கவில்லை என்பது மக்களிடம் பல கேள்விகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மனநிலையைத் துல்லியமாக அறியும் வகையில் தமிழக முன்னணி ஊடகம் ஒன்று கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் குறித்து தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரம் பேரிடம் அந்த ஊடகம் கருத்து கணிப்பை பெற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை பற்றி வரும் தகவல்களில் "உண்மை மறைக்கப்படுகிறது' என 50 வீத மக்கள் தங்களது கருத்தை உறுதியாக பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது என 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் கருத்து வெளியிட்டுள்ளனர்.
46 வீத மக்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துகிறது எனவும், 76 வீத மக்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மற்ற கட்சியினர் காட்டும் அக்கறை வெறும் விளம்பரம், போலித் தனம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில், "உண்மையிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா' என்ற சந்தேகத்துடன் "அப்பல்லோ மருத்துவமனையில் நடப்பதெல்லாம் வெறும் நாடகம்' என 17 வீத மக்கள் கருதுகின்றனர்.
இப்படி ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் நடைபெறும் நிகழ்வுகளை மிகச்சரியாக கணித்து வைத்திருக்கும் தமிழக மக்கள் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
""எம்.ஜி.ஆருக்கு முடியலைன்னு சொன்னாங்க. அமெரிக்கா கொண்டு போனப்ப, அவரைப் பற்றியும் ஒரே புரளி. அந்த நேரம்தான் அவரு ஆஸ்பத்திரியில இருக்குற மாதிரி படத்தை பேப்பர்ல போட்டாகளாம்.
நான் பேப்பர் பார்க்கலை. ஆனா எங்க வீட்டுக்கிட்ட உள்ளவங்க பார்த்துட்டு வந்து சொன்னாக... அதுக்குப்பிறகுதான் நிம்மதி ஆச்சு. இப்பதான் டி.வி., செல்போன் எல்லாம் இருக்கே.
அதுல அம்மாவைக் காட்டுனா மக்களெல்லாம் அமைதியா இருப்பாங்கதானே?'' என்கிற கருத்தை தமிழக மக்கள் முன்வைப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய உண்மைகளைச் சொல்லவேண்டும் என்பதே தமிழக மக்களின் குரலாக இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சி, அரசு என்பதெல்லாம் தமிழக மக்களுக்கு இரண்டாம் பட்சமாக இருப்பதாகவும், அவர்கள் எதிர்பார்ப்பது முதல்வரின் நல்ல உடல்நிலை பற்றிய படங்களுடன் கூடிய தமிழக அரசின் செய்தி அறிக்கையை மட்டும்தான் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையா..? வதந்தியா..? தமிழக முதலமைச்சர் குறித்த அதிர்ச்சி ரிசல்ட்..!
Reviewed by Author
on
October 14, 2016
Rating:

No comments:
Post a Comment