ஐ.நா செயலாளருக்கு தெளிவுபடுத்தினார் சம்பந்தன் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
அண்மையில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகள்சபையின் செயலாளர் பான்கீமூனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த போது எமது நிலைப்பாட்டை கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு(16) நடைபெற்ற அரசியல் அரங்கில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
மேலும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,
சர்வதேசத்தினுடைய அனுசரணையோடு மேற்கொள்கின்ற முயற்சிகளை நம்பி நாங்கள் செயற்படுகின்றோம். வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாமல் போனால் எம்மை ஏமாற்றிய அரசாங்கத்தை இங்கு ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என சம்பந்தர் கூறினார் என்றார்.
வடக்கு கிழக்கில் அரச நிர்வாகம் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என சம்பந்தர் ஐ.நா செயலருக்குத் தெளிவாகத் தெரிவித்தார் என்று கூறுகின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் சம்பந்தன் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூர எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.
ஐ.நா செயலாளருக்கு தெளிவுபடுத்தினார் சம்பந்தன் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
Reviewed by NEWMANNAR
on
October 18, 2016
Rating:

No comments:
Post a Comment