அண்மைய செய்திகள்

recent
-

விக்னேஸ்வரன் நாடுதிரும்பும் வரை பதில் முதலமைச்சராக குருகுலராஜா; ஏனைய பொறுப்புக்கள் ஐங்கரநேசனிடம்


வடக்கு மாகாண சபையின் பதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பொறுப்பேற்று கொண்டுள்ளார். முதலமைச்சரது ஏனைய பொறுப்புக்களை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் பொறுப்பேற்று கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் நேற்றைய தினம் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிர மாணம் செய்துகொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் லண்டன் சென்றுள்ளதன் காரணத்தினால் அவரது பொறுப்புக்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். அதன்படி பதில் முதலமைச்சராகவும், மாகாண திட்டமிடமிடல் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக கல்வி அமைச்சர் குருகுலராஜா இருப்பார்.

காணி வீடமைப்பு நிர்மாணம் புனருத்தானம், மகளிர் விவகாரம், கைத்தொழில்துறை, தொழில்துறை மேம்பாடு, சுற்றுலா ஆகிய வற்றுக்கு பதில் அமைச்சராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் பொறுப்பேற்று கொண்டுள்ளனனர். இந்த பொறுப்புக்களை பொறுப்பேற்று கொள் வதற்கு முன்னதாக நேற்றைய தினம் அவைத் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்கள்.

இந்த சத்தியபிரமாண விடயங்கள் கடிதம் மூலம் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. இந்த பதில் ஒழுங்குகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பும் வரை யில் அமுலில் இருக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அறிவித்தல் வழங்கி யுள்ளார்.
விக்னேஸ்வரன் நாடுதிரும்பும் வரை பதில் முதலமைச்சராக குருகுலராஜா; ஏனைய பொறுப்புக்கள் ஐங்கரநேசனிடம் Reviewed by NEWMANNAR on October 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.