தேசிய மட்டத்தில் மன்னார் கல்வி வலயம் சாதனை
2016ம் ஆண்டிற்கான 32வது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா இம்மாதம் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இவ்விளையாட்டுப்போட்டியில் மன்னார் கல்வி வலயம் சிறந்த பெறுபேற்றை வெளிக்கொணர்ந்து சாதனை படைத்துள்ளது.
21வயது ஆண்கள் பிரிவில் மன்அ/ரிப்பு றோ க த க பாடசாலை மாணவன் சகாய றினோசன் லெம்பேட் 110 மீ தடைதாண்டல் நிகழ்வில் 2ம் இடத்தையும் (வெள்ளிப்பதக்கம்) 17 வயது ஆண்கள் பிரிவில் மன்/சென் ஆன்ஸ் மமவி மாணவன் அபிக்சன் 400 மீ தடைதாண்டல் நிகழ்வில் 3ம் இடத்தையும் (வெண்கலபதக்கம்) பெற்றனர்.
அத்துடன் 21 வயது ஆண்கள் பிரிவில் மன்/சென் ஆன்ஸ் மமவி மாணவன் வேணிலன் மார்க் நீளம் பாய்தல் நிகழ்வில் 5ம் இடத்தையும் இ முப்பாய்ச்சல் நிகழ்வில் 7ம் இடத்தையும் 21 வயது பெண்கள் பிரிவில் மன்/முருங்கன்;மமவி மாணவி ஜஸ்மிதா நீளம் பாய்தல் நிகழ்வில் 5ம் இடத்தையும் 17 வயது ஆண்கள் பிரிவில் மன்/பற்றிமா மமவி மாணவன் கிளஸ்ரன் 800மீ நிகழ்வில் 5ம் இடத்தையும் 21 வயது ஆண்கள் பிரிவில் மன்/ சிலாவத்துறை அ.மு.மு பாடசாலை மாணவன் தேவராஜ் முப்பாய்தல் நிகழ்வில் 8ம் இடத்தையும் பெற்று இ மன்னார் கல்வி வலயத்திற்கும் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் 17 வயது ஆண்கள் பிரிவில் மன் சென் ஆன்ஸ் மமவி மாணவன் அபிக்சன் 400 மீ தடைதாண்டல் நிகழ்வில் 3ம் இடத்தை (வெண்கலபதக்கம்) பெற்றது மட்டுமன்றி வர்ண சாதனையையும் படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது 15 வயது ஆண்கள் உதைபந்தாட்ட போட்டியில் மன்/ புனித லூசியா மவி 3ம் இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளது.
2015ம் ஆண்டில் மன்னார் கல்வி வலயம் தேசிய மட்டத்தில் ஒரே ஒரு 3ம் இடத்தை மட்டுமே பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டில் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
இவ்வெற்றிகளுக்கு தங்களை முழுவதுமாக அர்ப்பணித்த மாணவர்கள் அவர்களது உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் அதிபர்கள் மற்றும் பக்க பலமாக இருந்த பாடசாலை சமூகத்தினர் யாவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
மேலும் நெறிப்படுத்திய மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் மற்றும் அலுவலக அதிகாரிகள் யாவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.
தேசிய மட்டத்தில் மன்னார் கல்வி வலயம் சாதனை
Reviewed by NEWMANNAR
on
October 18, 2016
Rating:

No comments:
Post a Comment