உலக புகழ் பெற்ற Tower Bridge மூடல்!
பிரித்தானியா தலைநகரில் இருக்கும் உலக புகழ்பெற்ற Tower Bridge மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1894 ஆண்டு முதல் பயன்பட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட லண்டன் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் விக்டோரியன் கோதிக் பிரிட்ஜ் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் தளமாக திகழ்கிறது.
தற்போது, பழுது பார்க்கும் பணிக்காக சனிக்கிழமை முதல் டிசம்பர் 30ம் திகதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 122 ஆண்டுகள் பழமையான பிரிட்ஜின் தரை மற்றும் மர அமைப்பு அடித்தளம் மாற்றப்படும். திறக்கும் நுட்பம் ஆய்வு செய்யப்படும் என லண்டன் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு பின்னர், நடைபயணிகள் பிரிட்ஜை பயன்படுத்தலாம். 2017ம் ஆண்டு முதல் வாகன போக்குவரத்திற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றிற்கு சுமார் 40,000 நடைபயணிகளும், 21,000 வாகனங்களும் இதில் பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக புகழ் பெற்ற Tower Bridge மூடல்!
Reviewed by Author
on
October 02, 2016
Rating:

No comments:
Post a Comment