மன்னார் மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்துப்பிரிவு பொலிஸாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து தொடர்பில் விழிர்ப்புணர்வு வீதி நாடகம்.-Photos
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகம் மன்னார் பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை மன்னாரில் நடாத்தப்பட்டது.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக கானொலி மூலம் காண்பிக்கப்பட்டதோடு,எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும்,விபத்துக்களில் இருந்து எங்களை எவ்வாறு பாதுகாப்பது போன்ற பல்வேறு விடையங்கள் மாணவர்களுக்கு அறிவூட்டல்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வீதி போக்குவரத்து தொடர்பாக கேற்கெப்பட்ட கேல்விகளுக்கு உரிய பதில் வழங்கிய 3 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகர சபை பிரதான வீதியில் மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்து வீதி நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டது.
குறிப்பாக பாதசாரிகள் வீதியில் எவ்வாறு நடந்து செல்ல வேண்டும்,வாகான ஓட்டுனர்கள்,துவிச்சக்கர வண்டி,முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் எவ்வாறு பயணிக்க வேண்டும்
,மற்றும் வீதியில் ஏற்படுகின்ற விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு விடையங்கள் மாணவர்களுக்கு வீதி நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டது.
இதன் போது பல நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,வைத்தியர்கள்,கல்வி த்திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்துப்பிரிவு பொலிஸாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து தொடர்பில் விழிர்ப்புணர்வு வீதி நாடகம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 11, 2016
Rating:

No comments:
Post a Comment