செல்போனால் சிதறிய கவனம்: இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 12 பேர் பலி!
ஜேர்மனி நாட்டில் செல்போனில் விளையாடியபோது கவனம் சிதறியதால் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
ஜேர்மனியில் உள்ள Bad Aibling என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள ரயில் நிலையம் ஒன்றில் மைக்கேல் பால்(40) என்பவர் ரயில்களுக்கு சிக்னல் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மைக்கேல் அனுப்பும் சிக்னல்களை பார்த்து தான் ரயில் ஓட்டுனர்கள் இயங்குவார்கள்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் பணியில் இருந்த மைக்கேல் அவரது செல்போனை வைத்துக்கொண்டு ஹேம் விளையாடியுள்ளார்.
செல்போனில் முழுக்கவனமும் முழ்கியதால் அவ்வழியாக வந்த இரண்டு ரயில்களுக்கு அவர் தவறான சிக்னல் கொடுத்துள்ளார்.
இதனால் இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக வந்துள்ளது. சில நிமிடங்களுக்கு பிறகு, செய்த தவறை உணர்ந்த மைக்கேல் ரயில்களில் இருந்த தொலைப்பேசியை தொடர்புக்கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் அவர் தவறான எண்களை அழுத்தியதால் அவரால் ஓட்டுனர்களை தொடர்புக்கொள்ள முடியவில்லை.
இதன் விளைவாக இரண்டு ரயில்களும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியாகினர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘நான் செய்தது மிகப்பெரிய தவறு. என்னுடைய கவனக்குறைவால் 12 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இனிமேல் அவர்களின் உயிரை என்னால் திருப்பி கொண்டு வர முடியாது. உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு இன்னும் சில தினங்களில் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்போனால் சிதறிய கவனம்: இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 12 பேர் பலி!
Reviewed by Author
on
November 11, 2016
Rating:

No comments:
Post a Comment