அண்மைய செய்திகள்

recent
-

200 ஆண்டுகளுக்குப் பின் 'அமெரிக்காவின் முதல் பெண்மணி'.....


200 ஆண்டுகளுக்குப் பின்னர் 'அமெரிக்காவின் முதல் பெண்மணி' அந்தஸ்து பெறும் மெலனியா ட்ரம்ப்

கடந்த 200 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சேராத டொனால்ட் ட்ரம்பின் மூன்றாவது மனைவி மெலனியா டிரம்ப் அந்த நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 45ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான மெலனியா ட்ரம்ப் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இதுவரை லூசியா லண்டனில் ஆங்கிலேய தாய்க்கும், அமெரிக்க தந்தைக்கும் பிறந்தவர். இன்று வரைக்கும் அமெரிக்காவைச் சேராத ''முதல் அமெரிக்கப் பெண்மணி'' என்ற பெயரை பெற்று இருந்தார்.

தற்போது இந்த லிஸ்டில் மெலனியாவும் சேருகிறார்.

மெலனியா ட்ரம்ப்..

கம்யூனிஸ்ட் நாடான யுகோஸ்லாவியாவில் கடந்த 1970ஆம் ஆண்டில் மெலனியா பிறந்தார்.

இவர் ஸ்லோவேனியாவில் மாடலாக இருந்தார். கடந்த காலங்களில் மெலனியாவின் பேச்சு விமர்சிக்கப்பட்டபோது, அவரை காப்பாற்ற வந்தவர் டொனால்ட் தான்.

டொனால்ட் பற்றி மெலனியா விமர்சனம் செய்தபோதும், ''டொனால்ட் மிகவும் கடினமானவர். அதே சமயம், குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பவர். நண்பர்களிடமும் ஊழியர்களிடமும், நாட்டு மக்களிடமும் அதேபோல் விசுவாசமாக இருப்பவர். உங்களுக்காக, உங்களது நாட்டுக்காக சண்டை போட ஒருவர் வேண்டும் என்றால் அவர்தான் டொனால்ட்'' என்று தெரிவித்து இருந்தார்.

டொனால்ட் பிரச்சாரங்களில் ஈடுபட்டபோது, அவருடன் மெலனியா அதிகளவில் கலந்து கொள்ளவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, இவரது நிர்வாண புகைப்படங்களை எல்லாம் எதிர் தரப்பினர் வெளியிட்டனர். ஆனால், அவற்றை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. இருவருமே விமர்சனங்களை தாங்கிக் கொண்டனர்.

மாடல் செய்வதற்கு மிலன் மற்றும் பாரீஸ் வந்த மெலனியா 1996இல் அமெரிக்காவுக்கு வந்தார். அப்போது அவர் டொனால்டை சந்திக்க நேர்ந்தது. பின்னர் இருவரும் 2005இல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார். அமெரிக்க குடியுரிமை கிடைத்த பின்னர், ''இந்த பூலோகத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது எனக்கு'' என்று மெலனியா தெரிவித்து இருந்தார்.

டொனால்டை 2005இல் திருமணம் செய்தபோது மெலனியா அணிந்து இருந்த ஆடையின் மதிப்பு 200,000 டாலர்.

தனது கணவர் வெள்ளை மாளிகையில் நுழைவார் என்பதை இவரே நம்பவில்லையாம். இன்று வெள்ளை மாளிகைக்குள் ''அமெரிக்காவின் முதல் பெண்மணி'' என்ற அந்தஸ்துடன் செல்கிறார் இந்த முன்னாள் மாடல் அழகி!!

200 ஆண்டுகளுக்குப் பின் 'அமெரிக்காவின் முதல் பெண்மணி'..... Reviewed by Author on November 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.